இலங்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகமான மருந்துகளை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலைமை காரணமாக மருந்துகள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கம் அளிக்கும் போதே அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தியாவிலிருந்து நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியாத மருந்துகளை சீன நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன உறுதியளித்தார்.