கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றாளர்கள் எவரேனும் தமது வீடுகளில் இருப்பார்களாயின் அது குறித்து 1906 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் வைத்தியசாலைகள் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத போது இந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த முடியும்.
அத்துடன், குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்போது வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.