January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார் ரஷ்ய தூதுவர் யூரி மதேரி

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மதேரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்குவதில் ரஷ்யா இலங்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது குறித்து தாம் கவனம் செலுத்துவதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.