
அமெரிக்க வங்கி ஒன்றில் இருந்து சட்ட விரோதமாக பணத்தை கொள்ளையிட்டு, இலங்கையில் வைப்பிலிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும் போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் வங்கிக் கணக்குக்கு சட்ட விரோதமாக 86 மில்லியன் ரூபாய் வைப்பிலிட்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவர்கள் அமெரிக்க வங்கிகளில் ஹேக்கிங் மூலம் கொள்ளையிட்ட 1440 மில்லியன் ரூபாய் பணத்தை இலங்கையில் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளிலும் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.