
இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் இலங்கைக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் இருந்து இந்தியர்கள் இலங்கைக்குள் கடல் வழியாக ஊடுருவியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கடற்படையினர் கரையோர பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.