
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஏறாவூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸார் மூலம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தளத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டிலேயே ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தைத் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்த இலத்திரனியல் பொருட்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் 14 முறைப்பாடுகள் இருப்பதாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.