February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வீடுகளில் நிகழ்வுகளை நடத்தத் தடை;உறவினர் வீடுகளுக்கு செல்லத் தடை’

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ நடத்த முடியாது என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வேறு வீடுகளுக்குச் செல்வதையும், உறவினர்களைச் சந்திப்பதையும் தற்காலிகமாக தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.