இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் இணையும் நோக்கில் மேற்படி முடிவெடுத்துள்ளதாக ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
நுஷாட் பெரேரா 2020 ஜனவரி மாதம் ஆரம்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், லங்கா சதோச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவர் 2020 டிசம்பரில் இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்மையில் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய நச்சுத்தன்மை அடங்கிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் இலங்கை தர நிர்ணய நிறுவன அதிகாரிகளினால் சர்ச்சைக்குறிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.