May 24, 2025 18:29:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு ஒரு விமானத்தில் பயணிக்க முடியுமான பயணிகள் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டது!

இலங்கைக்கு ஒரு விமானத்தில் பயணிக்க முடியுமான பயணிகள் தொகையை மட்டுப்படுத்துவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதோடு, வெளிநாட்டு பயணிகள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படும் வீதம் அதிகரித்ததைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை அதிகாலை 4 மணியின் பின்னர் இலங்கைக்கு வரும் விமானங்களில் அதிகூடியதாக 75 பயணிகள் மட்டுமே வர முடியும் என்று சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும் கொரோனா எச்சரிக்கையைக் கருத்திற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விமானத்தில் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் உள்ளடங்களாக 75 பேர் மட்டுமே இலங்கைக்கு பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டுடன் விமான சேவைகளை இயக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.