
ஆப்கானிஸ்தானில் உள்ள லோகர் மாகாணத்தின் புல்-ஆலம் நகரில் கடந்த 30 ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கண்மூடித்தனமான இந்த தாக்குதல் குற்றவாளிகளின் கொடுமையான முகத்தை நிரூபிக்கிறது” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
“ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நீடித்த அமைதியைக் கொடுப்பதற்காக, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.