இலங்கையில் இன்றைய தினத்தில் (சனிக்கிழமை) மேலும் 1,699 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது இலங்கையில் ஒரே நாளில் பதிவான உயர்ந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையாகும்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109,846 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 503 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 96,478 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளான 12,689 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் 1,160 கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 678 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இலங்கையில் 1662 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதில் குருநாகல் மாவட்டத்தில் 329 பேருக்கும், கொழும்பு மாவட்டத்தில் 317 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 329 பேருக்கும் காலி மாவட்டத்தில் 114 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று பதிவான தொற்றாளர் விபரம்..