October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தடுப்பூசியின் 1 ஆவது டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்படும் சாத்தியம்’

கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையை யடுத்து இது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், எனினும் எத்தனை பேருக்கு இவ்வாறு தொற்று உறுதியானது என்பது தெரியவில்லை என்றார்.

இதனிடையே தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு தடுப்பூசிகளை  பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

எனினும் நாட்டில் தற்போதுள்ள தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கவும் பைசர் தடுப்பூசி கொள்வனவு செய்யவும் தடுப்பூசி திட்டத்தை தடையின்றி முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மருத்துவ சேவையாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களிற்கு கொவிட்-19 தடுப்பூசியின் 2 வது டோஸை செலுத்தும் பணிகள் 29 ஆம் திகதி முதல்  ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.