
இலங்கை அணியின் அறிமுக வீரர் பிரவீன் ஜயவிக்ரமவின் அபார பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் 251 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.
சிறப்பாகப் பந்துவீசிய பிரவீன், 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இலங்கை எதிர் பங்களாதேஷ் இரண்டாம் டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 493 ஓட்டங்களைப் பெற்றக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 251 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை அணி 242 ஓட்டங்கள் ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இலங்கை அணியில் அறிமுக வீரராக பந்துவீச்சில் ஐந்து விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்ட 5 ஆவது வீரராக பிரவீன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.