இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான நீதிமன்ற நடவடிக்கைகள் புதிய ஒழுங்கில் செயற்படுத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய ஏற்பாடுகளுக்கு அமைய இம்மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலத்தில் நீதிமன்றங்களுக்கு சந்தேக நபர்கள் மற்றும் பிரதிவாதிகளை ஆஜர்படுத்த தேவையில்லை என்று நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.