இலங்கையின் பொருளாதாரம் இந்த வருடம் மீண்டும் வளர்ச்சியைக் காட்டும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் சேவைகளில் 6 வீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இலங்கையின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 3.6 வீதத்தால் சரிவடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 73 வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மொத்த தேசிய வருமானத்தில் 86.8 வீதமாக இருந்த இலங்கையின் கடன், 2020 ஆம் ஆண்டில் 101 வீதமாக அதிகரித்துள்ளது.