இலங்கையில் அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வாரத்துக்கு மூடத் தீர்மானித்ததாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் ஏப்ரல் மாதம் 30 திகதி வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்திருந்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், அடுத்த வாரம் முழுவதும் பாடசாலைகளை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.