இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் விசேட நடைமுறை ஒன்று தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் இந்திய பயணிகள் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளில் அதிகமானோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளில், இந்திய பயணிகள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படும் வீதம் அதிகமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.