இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பிலியந்தலை, அம்பலங்கொடை, தெஹியத்தகன்டிய, மற்றும் கலவான போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன.
பிலியந்தலையில் நம்பமுனுவ, கொரகபிடிய கிராம சேவகர் பிரிவுகளும், அம்பலங்கொடையில் கொடகம, தல்கஸ்கொடை கிராம சேவகர் பிரிவுகளும், தெஹியத்தகன்டியவில் தெஹியத்தகன்டிய, கதிரபுர கிராம சேவகர் பிரிவுகளும் கலவானவில் ஹபுகொட பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.