வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, கொவிட் -19 தொற்று நோயால் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில், 2020 இன் புள்ளிவிவரங்கள், 1948 இல் பிரிட்டனில் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியாகும் என்பதை அந்த அறிக்கை எடுத்து காட்டியுள்ளது.
மேலும் 2019 ஆம் ஆண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது
எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் முன்னேறும் என்றும் மேம்பட்ட உள்ளூர் உற்பத்தி மற்றும் சேவைகளின் பின்னணியில் ஆறு சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும் அறிக்கை கூறுகிறது.
மேலும்,பொருளாதாரத்தின் கவனத்தை மீட்டமைக்கவும், நீண்டகால கட்டமைப்பு பலவீனங்களை நிவர்த்தி செய்யவும், உற்பத்தி அடிப்படையிலான, உற்பத்தித்திறன் சார்ந்த பொருளாதாரத்தை நிறுவவும் கொவிட்-19 நெருக்கடி ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் ஆண்டு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.