
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள , கலேவெல, மாத்தளை மற்றும் நாவுல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் பன்னல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியும் உடுபத்தாவ , கல்அமுன ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மொனராகலை மாவட்டத்தில் ஹெலமுல்ல கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.