July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பொதுமக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது”; சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே!

தமக்கு விருப்பமான கொரோனா வைரஸ் தடுப்பூசியை தெரிவு செய்ய முடியாது என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் தங்களிற்கு விருப்பமான தடுப்பூசியை தெரிவு செய்யக்கூடிய நிலை இன்னமும் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை அஸ்ட்ரா செனகா, மற்றும் கொவிட் ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ளன.

அத்துடன், தற்பொழுது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக்-வி என்ற தடுப்பூசியும் விரைவில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும், பொதுமக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை ஏற்கனவே பயன்படுத்தியவர்களிற்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு போதுமான தடுப்பூசி கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.