புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் வகைகளை சந்தையில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் வகைகளை சந்தையில் இருந்து அப்புறப்படுத்துமாறு நுகர்வோர் அதிகாரசபை உரிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
‘எப்லடொக்ஸின்’ எனும் நச்சுப் பொருள் கலந்த தேங்காய் எண்ணெய் சந்தையில் இருப்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதியானது.
பல்வேறு விற்பனைப் பெயர்களுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் வகைகளில் ‘எப்லொடொக்ஸின்’ கண்டறியப்பட்டதாகவும், அவ்வாறான தேங்காய் எண்ணெய் வகைகளை சந்தையில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.