கொவிட் -19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், குளிரூட்டப்பட்ட மற்றும் மூடிய அலுவலகங்களில் பணியாற்றுவது மிகவும் ஆபத்தானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட மற்றும் மூடிய அறைகளில், கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவல் அடைவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே இது போன்ற இடங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை முடிந்தவரை திறந்து வைக்கும் படி அவர் பரிந்துரைத்துள்ளார்.
அலுவலகத்தில், முகக்கவசங்களை அணிவதும், நிறுவனத்திற்கு செல்லும்போதும் நிறுவனத்தை விட்டு வெளியேறும்போதும் கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுவதும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் சுதத் சமரவீர வலியுறுத்தினார்.
எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ள அவர், தொற்று நோய்கள் அல்லது பிற நோய்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.