
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெங் ஃபெங் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருடனான கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை பாராட்டியுள்ளது.