November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தூதரக சேவைகளை தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

இலங்கையில் கொவிட் 19 தொற்று அதிகரித்துவரும் நிலையில்,தூதரக விவகாரப் பிரிவு வழங்கும் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அவசர அல்லது உண்மையான தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தூதரக விவகாரப் பிரிவு வழங்கும் சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மரணங்கள் சார்ந்த விடயங்கள், ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சான்றிதழ்களுக்கு சான்றளித்தல் ஆகியன தவிர்ந்த ஏனைய சேவைகள் முன் நியமனத்தின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படும்.

முன்பதிவுகளுக்கு, பொது மக்கள் தூதரக விவகாரப் பிரிவை 011 2 335 942/011 2 338 836/0112 338 அல்லது அதன் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி (consular@mfa.gov.lk) வழியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.