January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் ஞாயிறன்று தீர்மானிக்கப்படும்’; கல்வி அமைச்சர்

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( (2ஆம் திகதி) தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதுதொடர்பில் இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் அனைத்துக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மே 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.