கனடாவுக்கான இலங்கையின் தூதுவராக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இலங்கைக்கான இத்தாலி நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் தூதுவராக எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பெயர் கடந்த நவம்பர் மாதம் பிரேரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது நியமனத்திற்கு கனடா ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் இத்தாலி நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சவுதி அரேபியாவின் தூதராக கடந்த நவம்பரில் பெயரிடப்பட்டிருந்த அகமட் ஏ.ஜவாத்துக்கு பதிலாக பி.எம்.அம்சா சவுதி அரேபியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜவாத் ஏன் இந்தப் பதவியை ஏற்கவில்லை என்பது தெளிவாக தெரியவில்லை.
மேலும் இந்த இரண்டு தூதுவர் நியமனங்களுடன், ஐந்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அவர்களில், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக அனுர திசாநாயக்க, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சின் செயலாளராக சிரினிமல் பெரேரா, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக பத்ரானி ஜெயவர்தன, நிலங்கள் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சின் செயலாளராக ஆர்.கே.கே.ரணவக்க ஆகியோருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.