January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்று; கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பிராந்திய காணொளி மாநாட்டில் இலங்கை பங்கேற்பு

கொவிட்-19 தொற்றை எதிர்கொள்வது குறித்த இலங்கை, சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான காணொளி மாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, பொருளாதார மீட்சி மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல், கொவிட் -19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவம்  பற்றி சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐ.நா. மற்றும் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டுதலின் கீழ், தடுப்பூசிகளை நாடுகளுக்கு இடையே சமமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் அமைச்சர் குணவர்தன மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த காணொளி மாநாட்டில் கொவிட்-19 க்கான பிரதிபலிப்பு சார்ந்த ஒத்துழைப்பை பலப்படுத்துதல், தொற்று நோய்க்கு  பிந்தைய பொருளாதார மீட்சியை ஊக்குவித்தல் மற்றும் கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியிலான வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.