
இலங்கையின் மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவற்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுத்துள்ளார்.
மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் கொள்ளளவை அதிகரிப்பதற்கான திறன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதனா மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அதிகளவான ஒக்ஸிஜனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மருத்துவ ஒக்ஸிஜன் வழங்கும் நிறுவனங்கள் மேலதிகமாக ஒக்சிஜன் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.