நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு அனுமதிக்குமாறு தனியார் மருத்துவ துறையினர் அரசிடம் கோரியுள்ளனர்.
நாட்டிற்கு இதுவரை அரசாங்கம் மட்டுமே கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்து வருகின்றது.
தனியார் துறைக்கு தடுப்பூசி வழங்க அனுமதிப்பதன் ஊடாக நாட்டில் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, பி.சி.ஆர் சோதனைகளை அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் செய்து வருவதுடன், அவை சிகிச்சை மையங்களாகவும் செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
அத்தோடு தமது தடுப்பூசி இறக்குமதியில், அரசாங்கத்தின் இலவச நோய்த்தடுப்பு திட்டத்திற்கு பங்களிப்பை வழங்க முடியும் என்றும் பரிந்துரைத்துள்ளன.
நாட்டில் ஜனவரி 29 ஆம் திகதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 925,242 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே செப்டம்பர் மாதத்திற்குள் 40% மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.