
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரியே, அவர் இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உரை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், உடல் நலக் குறைவு எனக் கூறி, அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே, தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்படுவதைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.