May 25, 2025 13:20:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

நாடு பூராகவும் அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்பள்ளிகள் உள்ளிட்ட ஏனைய கல்வி நிறுவனங்களும் இந்த காலப்பகுதியில் மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.