file photo: Facebook/ Hamad International Airport
இலங்கை, இந்தியா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கட்டார் அறிவித்துள்ளது.
கட்டாரின் பொது சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பைச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டே, கட்டார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்துக்குள் பிசிஆர் பரிசோதனை ஒன்றை செய்திருக்க வேண்டும் என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டும் என்றும் கட்டாரின் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.