July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மத்திய வங்கியில் பணம் அச்சிடுவதற்கும் ரூபாயின் பெறுமதி குறைவதற்கும் தொடர்பில்லை’: இராஜாங்க அமைச்சர் கப்ரால்

இலங்கையின் மத்திய வங்கியில் பணம் அச்சிடுவதற்கும் ரூபாயின் பெறுமதி குறைவடைவதற்கும் தொடர்பில்லை என்று நிதி மற்றும் மூலதனச் சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் அதிகமாகப் பணம் அச்சிடப்படுவதால் ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாகக் குறைந்து செல்கின்றதா? என்ற கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பொதுமக்கள் இதுதொடர்பில் அறியாமல் அவ்வாறு கூறும் நிலையில், விடயத்தை நன்றாக அறிந்த எதிர்க்கட்சியும் அதே குற்றச்சாட்டை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனமாக இருப்பதாகவும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி குறைந்தால், 2021 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 180 ரூபாய் பெறுமதியைப் பதிவு செய்யும் என்றும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.