January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேகாலை மாவட்ட பாடசாலைகளும் மூடப்பட்டன!

கேகாலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தீர்மானித்துள்ளார்.

இதன்படி சபரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் மூடப்படும் என்று ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தின் கொரோனா நிலவரத்தை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று முதல் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.