File Photo
இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்படையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே அமைச்சரினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டும் இந்திய மீனவர்கள் ஊடாக புதிய வகை வைரஸ் இலங்கைக்குள்ளும் பரவக் கூடுமெனவும் இதனால் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கையெடுக்குமாறு அவர் கடற்படையினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இலங்கை – இந்திய மீனவர்கள் சந்தித்துக்கொள்வார்கள் எனவும் இதனை தடுக்கும் வகையில் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் கடற்படையினரை கேட்டுகொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவில் பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொடர்பில் இலங்கை மீனவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இதன்படி இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.