மன்னாரில் பெரியகடை மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக இன்று மாலை முதல் அந்தப் பிரதேசங்களுக்கு வெளியார் செல்லவோ, அங்கிருந்து எவருக்கும் வெளியில் செல்லவோ முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
பட்டித்தோட்டம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவருடன் தொடர்புகளை பேணியவர்களிடம் நடத்தப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் இவர்கள் அதிக தொடர்புளை பேணிய பெரியகடை, பட்டித்தோட்டம் கிராமங்களில் உள்ள பலரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.