
இலங்கையின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்று வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விசாரணை பற்றி விளக்கமளித்தார்.