இலங்கையில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதையடுத்து சுகாதார அமைச்சு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
திருமண நிகழ்வுகளின் போது, மண்டபங்களில் 50 சதவீதமானோருக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், 150 பேருக்கு மேற்படாத வகையில் நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.