January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை ஆர்வமாக உள்ளது”: பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ

பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆர்வமாக இருக்கின்றது என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77 ஆவது அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

கொழும்பு அலரிமாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் அந்த அமர்வில் உரையாற்றினார்.

கடந்த காலத்தில் கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்ததாக இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நோயாளர்களை அடையாளம் காணல், அவர்களின் தொடர்புகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல், தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் இந்த நோக்கத்திற்காக, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உள்ளக அமைச்சுக்களின் வழிநடத்தல் குழு நிறுவப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டிபயுள்ளார்.