முகக்கவசம் அணியாமல் கொரோனா பொது வெளியில் தோன்றிய தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவுக்கு திங்களன்று 190 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் ஒரு கூட்டத்தில் முகமூடி அணியாமல் கலந்து கொண்டதைக் காட்டும் புகைப்படத்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை கவனித்த பாங்காக் ஆளுநர் அஸ்வின் இவ்வாறு கொரோனா விதிகளை மீறியதாக தெரிவித்து அபராதம் விதித்துள்ளார்.
இது குறித்து “விதிகளை மீறுவதாக நான் பிரதமருக்கு அறிவித்தேன்” என்று பாங்காக் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்தோடு பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டமையானது, மக்கள் பொதுவெளியில் எப்போதும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இதுவரை 57,508 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான 31,593 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.