இலங்கையில் கொவிட்- 19 வைரஸ் தொற்றை தவிர இன்னும் சில வைரஸ் காய்ச்சல்கள் சிறுவர்களிடையே பரவுவதாக சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த நாட்களில் டெங்கு மற்றும் புதிய வைரஸ் காய்ச்சல் சிறுவர்களிடையே அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வைரஸ்கள், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளை சிறுவர்களிடையே ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சில சிறுவர்களுக்கு டெங்கு போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்ட போதிலும் அவர்களுக்கு வேறொரு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய வைரஸ் தொற்று சிறுவர்களிடையே வாய் புண்கள், கைகள் மற்றும் கால்களில் சிவப்பு புள்ளிகளைத் தோற்றுவிப்பதாகவும் இந்த அறிகுறிகள் இருந்தால் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவதானமாக செயற்படும் படியும் பொது மக்களை சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.