
கதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த கப்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் இருந்து சீனாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கதிரியக்க பொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்று அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது.
அனுமதியின்றி துறைமுகத்துக்குள் நுழைந்த கப்பலை பரிசோதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கப்பலில் தீங்கு விளைவிக்கும் கதிரியக்க பொருட்கள் இருப்பதை அணுசக்தி அதிகாரசபை கண்டறிந்தது.
இந்நிலையில், கப்பலை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தோடு, ஆபத்தான கதிரியக்க பொருட்கள் இருந்ததை மறைத்த கப்பலின் உள்நாட்டு முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை அணுசக்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.