
தனது அரசியல் பயணத்திற்கு தடையாக இருப்பவர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று தனது வேலைகளுக்கு தடையாக இருப்பதற்கு எவருக்கும் இடமளிப்பதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இதுவரை காலமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசியலில் ஈடுபட்டதாகவும், எந்தவொரு வேலையையும் செய்யவிடாமல் தடைகள் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியினுள் தனது திட்டங்களுக்கு தடையாக இருப்பவர்கள் உடனடியாக வெளியேறலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.