
நுவரெலியா, இராகலை மத்திய பிரிவு தோட்டத்தின் 9 ஆவது இலக்க நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.
16 வீடுகளைக் கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன் அதனால் 6 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை தீ பரவியுள்ளது. இதன்போது பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
எவ்வாறாயினும் இதன்போது பெருமளவு பொருட்களுக்கு சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை எனவும் நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.