January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளுக்கு சென்று தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டதோடு, விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்னர் கொட்டகலை பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு சென்று பார்வையிட்டதுடன்  லயன் குடியிருப்புகளுக்கு சென்று அங்கு உள்ள இந்திய வம்சாவளி மலையக மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், இந்திய வீடமைப்பு திட்டத்தை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறியதுடன், எதிர்வரும் காலங்களில் பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, கண்டிக்கான பதில் இந்திய உயர்ஸ்தானிகர் கிருஷ்ணபிரசாத், இ.தொ.கா.வின் உப செயலாளரும், சர்வதேச விவகார பொறுப்பாளரும், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி, கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் பெருமாள் நேசன், கொட்டகலை பெருந்தோட்ட யாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொகான் எட்வட் போன்றோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.