நாடாளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சந்திக்கவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிட்டி தலைமை தாங்குகிறார்.
அமைச்சர்கள் சாமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல,சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், ரஞ்சித் மத்தும பண்டார, எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.