திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவித்துள்ளார்.
திருகோணமலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்கள், ஆசிரியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.