இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். கோப்பாய் பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், யாழ்ப்பாணத்தில் வைத்து பிரதான சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநகர், நீர்வேலி மற்றும் கோப்பாய் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளிகள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் கடந்த 10 நாட்களில் 135 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் ஒரு கிலோ ரூ .10 மில்லியனுக்கு விற்கப்படும் நிலையில், கைப்பற்றப்பட்ட 07 கிலோ மருந்துகளின் மொத்த பெறுமதி சுமார் ரூ .7 0 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.