அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் அனைத்தையும் உடன் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளையும் உடன் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தனியார் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்கள் ஆகியவற்றை உடன் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய இவ்வாறு அரச மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.